1. நேர்மை
1. நேர்மை
அறிமுகம்
உலகம்
மிகவும் பரபரப்பாக இருக்கிறது, நாமும் சில நேரங்களில் எங்குச் செல்கிறோம், எப்படி
வழிநடத்தப்படுகிறோம் என்பதைப் பற்றிச் சிந்திக்காமல் மற்றவர்களுடன்
ஒரு பாதையில் ஓடுகிறோம். பெரும்பாலான நேரங்களில் நாம் செய்யும் செயல்கள் நமக்கு வெகுமதிகளையும் அங்கீகாரத்தையும் தருவதால் அவற்றின் மூலம் மற்றவர்களைப் பிரியப்படுத்த முயற்சிக்கிறோம். மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதான நமது உண்மையான
மதிப்பையும் திருப்தியையும் கண்டுபிடிக்கத் தவறுகிறோம். நாம்
எப்பொழுதும் நம்மால் முடிந்ததைச் சிறந்த விதத்தில்
செய்யும்போது, மற்றவர்களை மகிழ்விப்பதற்காக மட்டும் அல்ல,
ஆனால் நம்முடைய திறனைப் பயன்படுத்தவும், உண்மையான
இதயத்துடன் நம்மால் முடிந்ததைச் செய்யவும் பார்ப்போம், அதுவே
நேர்மை. நேர்மை என்பது நமது உணர்வுகள்,
எண்ணங்கள் மற்றும் செயல்களின் உண்மையான தன்மை மற்றும் நமது
வாழ்க்கையின் தரங்கள் மற்றும் உயர் மதிப்புகளுடன் சேர்ந்திருப்பதாகும்.
முக்கியத்துவம்
அநியாயத்துடன் இருப்பது செழிப்பைப் பெற்று தருவதாகத் தோன்றலாம்
ஆனால் அவற்றைப் பெற்றிருப்பவர்களுக்கு அவற்றால் நம்பிக்கை இல்லை , அதேசமயம் நேர்மையுடன் இருப்பது
மிகப்பெரிய நம்பிக்கையைத் தருகிறது. அநியாயத்துடன் இருப்பதனால்
கிடைக்கும் உடைமைகளினாலோ உரிமைகளினாலோ மாற்றம் ஏற்படுத்தாது , ஆனால்
நேர்மையுடன் இருப்பது நம்மை நாமே சரியாக நியாயம் தீர்ப்பதற்கு
உதவுகிறது, அது உணர்வுகளையும் சிந்தனைகளையும் அமைதிப்படுத்துகிறது. நியாயந்தீர்க்கப்படும்போது, அநீதியானவர்
தண்டிக்கப்படுவார், நேர்மையுடன் இருப்பவர் பலனைப் பெறுவார். நேர்மையுடன் இருப்பவர் மற்றவர்களுக்கு
நீதிபதியாக இருக்கவும் அழைக்கப்படுவார். நேர்மையுடன்
இருப்பவர் மற்றவர்களுக்கு நல்ல தலைவராக மாறுவார். நேர்மையுடன் இருப்பவர் மன்னிப்பு
மற்றும் நல்லிணக்கத்தைப் பெறுகிறார். நேர்மையுடன் இருப்பது மற்றவர்களைத் துன்புறுத்தவோ அல்லது சுரண்டவோ அனுமதிக்காது,
மேலும் ஒருவர் தமது அதிகாரத்தையும் பதவியையும் தவறாகப் பயன்படுத்த நேர்மை ஒருபோதும் அனுமதிக்காது.
பயன்படுத்தப்படும் சூழ்நிலைகள்
ஒருவர்
இருக்கும்போதோ அல்லது யாரும் இல்லையெனினும்,
வெகுமதி கிடைக்கும்போதோ அல்லது
துன்புறுத்தப்படும்போதோ, அமைதி இருக்கும்போதோ அல்லது வன்முறை இருக்கும் போதோ, செல்வம்
இருக்கும்போதோ அல்லது வறுமை இருக்கும்போதோ, நன்மை இருக்கும் போதோ அல்லது தீமை இருக்கும்போதோ,
ஒரு நபர் நேர்மையுடன் இருக்க வேண்டும். சுருக்கமாக, நேர்மை என்பது ஒரு மதிப்பீடு என்பதை தாண்டி அவசியமாக இருக்க வேண்டியது.
பாதிக்கும் காரணிகள்
நேர்மையுடன்
இல்லாமல் இருப்பதற்கு இன்னல்களும் வறுமையும்
ஒரு காரணியாக இருக்கலாம். நேர்மையுடன் இருப்பது கூடச் சில சமயங்களில் உபத்திரவத்தையும் வறுமையையும் ஏற்படுத்தலாம். சோம்பேறித்தனம் மற்றும்
ஒழுங்கற்ற தன்மையுடன் இருப்பது நேர்மையின்மைக்கு
வழிவகுக்கும்.
தாக்கங்கள்
இதயத்தில்
நேர்மையுடன
இருப்பது ஒரு நபர் தவறு செய்வதிலிருந்து அவரைத் தடுக்கும், அவரைச்
சுற்றியுள்ள விஷயங்கள் மாற்றியமைக்கப்பட்டிருந்தாலும், ஏதாவது
முயற்சி செய்ய அவருக்கு நேர்மை இடமளிக்கும். நேர்மையானது
நேர்மையானவர்களை மகிழ்விக்கும். எதிர்கொள்ள
வேண்டிய சவால்கள் மற்றும் சிரமங்களின் காரணமாக மற்றவர்கள் கண்டித்தாலும், விமர்சித்தாலும், ஒடுக்கினாலும், அனைவரின் முன்னிலையிலும் நமது குணாவதிசயத்தையும்
நற்குணத்தையும் பாதுகாக்க, நேர்மை நமது
மரணம் வரை உறுதியாக இருக்க வேண்டும். நேர்மையானவர்களை நேர்மை
வழிநடத்தும்.
கதை/ வழக்கு ஆய்வு
ஒரு
ஞானி அவரது சீஷரை நோக்கி, “ஒரு காலத்தில்
ஒரு செல்வந்தன் வாழ்ந்து வந்தான். வியாபாரத்தைக் கவனிக்கும்பொருட்டு அவனிடம் ஓர்
அதிகாரி இருந்தான். அந்த அதிகாரி ஏமாற்றுவதாக அச்செல்வந்தனுக்குப் புகார்கள்
வந்தன. எனவே அந்த அதிகாரியை அழைத்து அவனை நோக்கி, ‘உன்னைக்
குறித்துத் தவறான செய்திகளைக் கேள்விப்பட்டேன். எனது பணத்தை எவ்வாறு
பயன்படுத்தினாய் என்பதற்கான அறிக்கையைக் கொடு. இப்போது நீ எனக்கு அதிகாரியாக
இருக்க முடியாது’ என்றான். “பின்னர் அந்த அதிகாரி தனக்குள்ளேயே, ‘நான்
என்ன செய்வேன். என் எஜமானர் என்னை வேலையில் இருந்து அகற்றிவிட்டார். குழிகளைத்
தோண்டுமளவு வலிமை என்னிடம் இல்லை. பிச்சை எடுக்க வெட்கப்படுகிறேன். நான் என்ன
செய்யவேண்டுமென எனக்குத் தெரியும். நான் வேலையை இழக்கும்போது பிற மக்கள் தம்
வீட்டுக்குள் என்னை வரவேற்கும்படியான ஒரு செயலை நான் செய்ய வேண்டும்’ என்று
நினைத்தான். “எனவே, அந்த அதிகாரி
எஜமானனுக்குக் கடன் தர வேண்டியவர்களை அழைத்தான். முதலாமவனை நோக்கி, ‘எனது
எஜமானனுக்கு நீ கொடுக்கவேண்டிய கடன் எவ்வளவு?’ என்றான்.
அவன், ‘நான்
நூறு குடம் ஒலிவ எண்ணைய் கடன்பட்டிருக்கிறேன்’ என்றான். அதிகாரி அவனிடம், ‘இதோ
உன் பற்றுச் சீட்டு. சீக்கிரம் நீ உட்கார்ந்து உன் பற்றைக் குறைத்து ஐம்பது குடம்
என்று எழுது’ என்றான். “பின் அதிகாரி மற்றொருவனை நோக்கி, ‘எனது
எஜமானனுக்கு நீ திருப்பவேண்டிய கடன் எவ்வளவு?’ என்றான்.
அவன், ‘நான்
நூறு மரக்கால் கோதுமை கடன்பட்டிருக்கிறேன்’ என்று பதில் சொன்னான். உடனே அதிகாரி
அவனிடம், ‘இதோ
உனது பற்றுச் சீட்டு. இதைக் குறைத்து எண்பது மரக்கால் என்று எழுது’ என்றான்.
“பின்னர் எஜமானன் நம்பிக்கைக்குத் தகுதியற்ற அந்த அதிகாரியை அவன் திறமையாகச்
செய்ததாகப் பாராட்டினான். ஆம், உலகத்திற்குரிய
மனிதர் தங்கள் காலத்து மக்களோடு வியாபாரத்தில், பக்தியுள்ள
மனிதர்களைக் காட்டிலும் திறமையானவர்களாகக் காணப்படுகிறார்கள். “நான் உங்களுக்குச்
சொல்கிறேன், நட்பைக் காப்பாற்றும்பொருட்டு இந்த
உலகத்தில் உனக்குரிய பொருட்களை எல்லாம் பயன்படுத்து. அந்தப் பொருட்கள் எல்லாம்
அழிந்த பின்னர் என்றும் நிலைத்திருக்கிற வீட்டில் நீ வரவேற்கப்படுவாய். சிறிய
காரியங்களில் நம்பிக்கைக்கு உகந்த மனிதன் பெரிய காரியங்களிலும் நம்பிக்கைக்கு
ஏற்றவனாயிருப்பான். சிறிய காரியங்களில் நம்பிக்கைக்குத் தகாதவனாக இருப்பவன் பெரிய
காரியங்களிலும் அவ்வாறே இருப்பான். உலகச் செல்வங்களிலும் நீங்கள் நேர்மையற்றவர்ளாக
இருக்கும்போது உண்மையான செல்வத்திலும் நீங்கள் நேர்மையற்றவர்களாகவே இருப்பீர்கள்.
யாராவது ஒருவருக்குரிய பொருட்களில் உங்களை நம்பமுடியாவிட்டால் உங்களுக்குச்
சொந்தமாக எந்தப் பொருளும் கொடுக்கப்படமாட்டாது. “ஒரே நேரத்தில் நேர்மையுடன் இரு
எஜமானர்களுக்குப் பணிபுரிய எந்த வேலைக்காரனாலும் முடியாது. அந்த வேலைக்காரன் ஒரு
எஜமானனை வெறுத்து, மற்ற எஜமானனை
நேசிப்பான். அல்லது அவன் ஒருவனுக்கு நம்பிக்கைக்குரியவனாக நடந்துகொண்டு மற்றவனிடம்
வேறு முறையில் நடந்து கொள்வான்.” என்றார்.
செயல்பாடு
பங்கேற்பாளர்கள்
6-8 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்படலாம். சில சோதனைக்கான காரியங்களுடன் அவர்களுக்குத் தொடர்ச்சியாக
அறிவுரைகள் வழங்கப்படலாம் முடிவில் அவர்கள் சேகரிக்க
வேண்டிய ஒன்றைச் சேகரிப்பதற்காக அவற்றைப் பின்பற்ற வேண்டும்.
Comments
Post a Comment