2. ஒழுக்கம்

2. ஒழுக்கம்

 

அறிமுகம்

ஒழுக்கம் என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிலைகள் மற்றும் மதிப்பீடுகளுக்கு நம்மை உட்படுத்தும் சுயக்கட்டுப்பாடு ஆகும், ஆக்கபூர்வமாக ஒருவரோடு ஒருவர் ஈடுபடுவதற்கும், யாரையும் எதிர்மறையாகப் பாதிக்காத வகையில் இருப்பதற்கும் இது உதவுகிறது. ஒழுக்கம் யாரோ ஒருவருவடைய ஊந்துதலால் இருப்பதாக அல்லாமல், மாறாக நம் சுய-மனசாட்சியின் அடிப்படையில் இருக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒழுக்கம் மற்றும் சுயக்கட்டுப்பாடு இருக்க வேண்டும், ஏனென்றால் ஒவ்வொருவரும் தங்கள் உணர்ச்சிகள் மற்றும் புத்திசாலித்தனத்தின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளனர்.

 

முக்கியத்துவம்

சில விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் ஏன் வகுக்கப்படுகின்றன என்பது சில சமயங்களில் நமக்குத் தெரியாது, ஆனால் அதைப் பின்பற்றுவது நமக்கோ அல்லது பிறருக்கோ ஒரு பொதுவான நோக்கத்தை நிறைவேற்ற நிச்சயமாக உதவியாக இருக்கும். சில விஷயங்களை உருவாக்கியவர் கூட அவர் தீர்மானித்த ஒரு நோக்கத்திற்காகச் சில விஷயங்களுக்கு உட்பட்டிருக்க வேண்டும். சுயக்கட்டுப்பாட்டுடன் கூடிய சுய ஒழுக்கமானது அசுத்தம், கோபம், சச்சரவு, மதங்களுக்கு எதிரான கருத்துக்கள், பொறாமை, போதை, களியாட்டம் போன்றவற்றிலிருந்து விலகி இருக்க உதவும். நற்பண்புகள், சரியான நம்பிக்கைகள் மற்றும் அறிவுத்திறனுடன் கூடிய ஒழுக்கமானது பொறுமை, நன்மை, இரக்கம் மற்றும் அன்புக்கு வழிவகுக்கிறது.. திருத்தத்திற்கு உட்படுவதன் மூலம் ஞானத்தையும் புரிதலையும் கண்டறிய முடியும். திருத்தமானது ஒரு குழந்தையை முட்டாள்தனத்திலிருந்து விலக்கி, தீமையிலிருந்து விடுவிக்கும்.

 

பயன்படுத்தப்படும் சூழ்நிலைகள்

குழந்தைகள் சுதந்திரமாக மாறும் பக்குவம் வரும் வரையிலும், அறிவுறுத்தல்கள் அதிக மதிப்புடையதாக இருக்கும் பொழுதும் பெற்றோருக்கு ஒழுக்கத்துடன் கீழ்ப்படிந்திருக்க வேண்டும். நாம் அனைவரும் சரியானவையும் பொது நலனுக்கு உரியதுமான அறிவுறுத்தல்களைப் பின்பற்றி ஒழுக்கத்துடன் நம் அதிகாரிகளுக்குக் கீழ்ப்படியலாம், ஏனெனில் இது ஒரு விருப்பத்தேர்வு அல்ல, ஆனால் ஒரு அத்தியாவசியம். பங்குதாரர்கள் தங்களோடு உள்ளவர்களின் நல்வாழ்வுக்காக ஒழுக்கத்துடன் ஒருவருக்கொருவர் கீழ்ப்படியலாம். ஊழியர்கள் எஜமானர்களுக்கு ஒழுக்கத்துடன் கீழ்ப்படியலாம். இளையவர்கள் மூப்பர்களின் சரியான அறிவுரைகளுக்குக் கீழ்ப்படியலாம், ஒவ்வொருவரும் ஒரு பொது நலனுக்காகக் காரியங்கள் இருக்கும்போது ஒழுக்கத்துடன் ஒருவருக்கொருவர் கீழ்ப்படியலாம்.

 

பாதிக்கும் காரணிகள்

பெருமையான சுய நல எண்ணம் கொண்ட ஒருவர் ஒழுக்கத்தைத் தவிர்க்கலாம் மற்றும் சரியானதைப் பின்பற்றாமலும் இருக்கலாம். சரியான வழியைப் பின்பற்ற விரும்பாத ஒருவர், திருத்தத்திற்கு தன்னை உட்படுத்தமாட்டார். திருத்துவதற்கு ஒரு பிரம்பால் குழந்தையை அடிக்கும் போது, அது அவர்களைச் சிறிது பாதிக்கலாம், ஆனால் அது குழந்தையைப் பெரிய தீமையிலிருந்து பாதுகாக்கிறது. மக்களின் முட்டாள்தனமும், எது சரியானது என்று கண்டறிவதற்கான அறிவின்மையும் திருத்தம் பெறுவதைத் தடுக்கிறது. வெறும் வார்த்தைகளால், ஒரு பணியாளர் ஒழுக்கத்தை பெறுவதில்லை, ஆனால் ஒழுக்கம் என்றால் என்ன என்பதை எடுத்துக்காட்டுவது முக்கியம்.

 

தாக்கங்கள்

சரியான அறிவுறுத்தல்களுடன் கூடிய ஒழுக்கம் ஒரு நபர் தனது நாட்களைச் செழிப்புடனும், அவர்களின் ஆண்டுகளை மகிழ்ச்சியாகவும் கழிக்க உதவும். ஒரு நபர் சரியானதைப் பின்பற்றுவதன் மூலமும் ஒழுக்கத்துடன் நன்கு இருக்கும்போதும், ​​தவறுச் செய்பவர் கூடக் கீழ்ப்படிவார் , மேலும் அந்த நபர்  அதற்கான வெகுமதியைப் பெற்று மகிழ்ச்சியடைவார். மக்கள் திருத்தத்தைப் ஏற்காதபோது, ​​சத்தியம் அழிந்துவிடும். ஒழுக்கத்தைப் ஏற்கும் ஒரு நபர் பரிபூரணமாவராகவும், நல்ல செயல்களைச் செய்வதற்குத் தகுதியுடையவராகவும் இருப்பார். நம்மிடத்தில் உண்மையான அக்கறை கொண்டவர்களிடமிருந்தோ அல்லது நம்மீது அதிகாரம் உள்ளவர்களிடமிருந்தோ நாம் ஒழுக்கத்தை கற்றுக்கொண்டு கடைப்பிடிக்க வேண்டும், ஏனெனில் அது நம்முடைய சொந்த நன்மைக்காகவும், தவறுகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் சிறந்தது. ஒழுக்கம் நம் மீது அக்கறையும் அதிகாரமும் உள்ளவர்களின் இதயத்தில் மகிழ்ச்சியைத் தருகிறது. ஒழுக்கம் ஒரு நபரை மீட்டெடுக்கிறது. ஒழுக்கம் கண்டனத்தை நீக்குகிறது.

 

கதை/ வழக்கு ஆய்வு

மாஹி இவ்வாறு எழுதினார், “செர்சஸ் ராஜாவின் இருபதாம் வருஷம் நிசான் மாதத்திலே, திராட்சரசம் ராஜாவுக்கு முன்பாக வைத்திருக்கையில், நான் அதை எடுத்து அவருக்குக் கொடுத்தேன்; நான் முன் ஒருபோதும் அவர் சமுகத்தில் துக்கமாயிருந்ததில்லை. அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: நீ துக்கமுகமாயிருக்கிறது என்ன? உனக்கு வியாதியில்லையே, இது மனதின் துக்கமே ஒழிய வேறொன்றும் அல்ல என்றார்; அப்பொழுது நான் மிகவும் பயந்து, ராஜாவை நோக்கி: ராஜா என்றைக்கும் வாழ்க; என் பிதாக்களின் கல்லறைகள் இருக்கும் ஸ்தலமாகிய நகரம் பாழானதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கும்போது, நான் துக்கமுகத்தோடு இராதிருப்பது எப்படி என்றேன். அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: நீ கேட்கிற காரியம் என்ன என்றார். அப்பொழுது நான் வேண்டுதல் பண்ணி, ராஜாவைப் பார்த்து: ராஜாவுக்குச் சித்தமாயிருந்து, அடியேனுக்கு உமது சமுகத்தில் தயை கிடைத்ததானால், என் பிதாக்களின் கல்லறைகளிலிருக்கும் பட்டணத்தைக் கட்டும்படி, சாலேம் தேசத்துக்கு நீர் என்னை அனுப்ப வேண்டிக்கொள்ளுகிறேன் என்றேன். அப்பொழுது ராஜஸ்திரீயும் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். ராஜா என்னைப் பார்த்து: உன் பிரயாணம் எத்தனை நாள் செல்லும், நீ எப்பொழுது திரும்பி வருவாய் என்று கேட்டார். இவ்வளவுகாலம் செல்லுமென்று நான் ராஜாவுக்குச் சொன்னபோது, என்னை அனுப்ப அவருக்குச் சித்தமாயிற்று. பின்னும் நான் ராஜாவைப் பார்த்து: ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், நான் சாலேம் தேசத்துக்குப்போய்ச் சேருமட்டும், நதிக்கு அப்புறத்திலிருக்கிற தேசாதிபதிகள் என்னை வழிவிட்டனுப்பும்படிக்கு அவர்களுக்குக் கடிதங்கள் கொடுக்கும்படிக்கும், ஆலயத்துக்கு இருக்கிற அரணின் கதவு வேலைக்கும், நகர அலங்கத்தின் வேலைக்கும், நான் தங்கப்போகிற வீட்டின் வேலைக்கும் வேண்டிய மரங்களை ராஜாவின் வனத்துக் காவலாளனாகிய ஆசாப் எனக்குக் கொடுக்கும்படிக்கும், அவனுக்கும் ஒரு கடிதம் கட்டளையிடப்படுவதாக என்றேன்; நான் தயவை பெற்றிருந்த்தால், ராஜா அவைகளை எனக்குக் கட்டளையிட்டார்.”

 

செயல்பாடுகள்  

பங்கேற்பாளர்கள் 6-8 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்படலாம். ஒவ்வொரு குழுவிற்கும் தயாராவதற்கு 3 நிமிடங்கள் கொடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு குழுவும் துல்லியமாகப் பின்பற்றுவதற்கான தரநிலைகள் மற்றும் நடைமுறைகளுடன் கூடிய சில காரியங்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். அவர்கள் 30 வினாடிகள் செய்து அதை மற்ற குழுக்களுக்கு முன்பாகக் காட்சிப்படுத்த வேண்டும். பின்னர் ஒன்றாகச் செய்வதில் ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை குறித்து விவாதிக்கலாம். சிறப்பாகச் செய்யும் குழு/ நபர் அங்கீகரிக்கப்படலாம்.

 

'கடவுள் சொல்கிறார்' என்ற அறிவுறுத்தலைப் பின்பற்றுவதற்கான ஒரு எளிய செயல்பாடு நடத்தப்படலாம், இதில் ஒருமுறை கைதட்டு, எழுந்து நில், கைகளை உயர்த்து, தலையைச் சுழற்று போன்ற சில செயல்களை வழிநடத்துபவர் பகிர்ந்துகொள்வார். 'கடவுள் சொல்கிறார்' என்று சொன்ன பிறகு சொல்லப்படும் செயல்களை மட்டுமே பங்கேற்பாளர்கள் செய்ய வேண்டும். மேலும் 'கடவுள் சொல்கிறார்' என்று சொல்லாமல் வெறுமனே சொல்லப்படும் செயல்களை அவர்கள் செய்தால், அவர்கள் விளையாட்டிலிருந்து வெளியேற வேண்டும். 

 

கைதட்டல் முறைமை  கூட ஒழுக்கத்தை கற்பிப்பதற்கான செயல்பாடாகப் பயன்படுத்தப்படலாம். வழிநடத்துபவர் சில முறைகளில் கைதட்ட வேண்டும், பங்கேற்பாளர்கள் அதைப் பின்பற்ற வேண்டும். யாரேனும் முறை தவறவிட்டால், அவர்கள் விளையாட்டிலிருந்து வெளியேற வேண்டும். சிறப்பாகச் செய்யும் நபர் அங்கீகரிக்கப்படலாம்.

Comments