3. பணிவு

3. பணிவு

 

அறிமுகம்

பெரும்பாலான சமயங்களில் நமது யோசனைகள் செயல்படுத்தப்பட வேண்டும் எனவும், நமது கருத்துகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனவும் விரும்புகிறோம், ஆனால் நம்முடையது அல்ல என்றாலும், மற்றவர்களின் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் சிறந்ததைத் தேர்ந்தெடுக்கத் தவறினால், எதையாவது இழக்க நேரிடலாம் எனபது குறிப்பிடத்தக்கது. மனத்தாழ்மை என்பது மற்றவர்களை முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகக் கருதுவது மற்றும் சுயநல லட்சியம் அல்லது வஞ்சகத்தால் எதையும் செய்யாமல் இருப்பது.

 

முக்கியத்துவம்

தாழ்மையான மக்கள் தீமைகளிலிருந்து இரட்சிக்கப்படுவார்கள்  மேலும் எல்லா தவறுகளிலிருந்தும் தீமைகளிலிருந்தும் மன்னிக்கப்படுவார்கள். மனத்தாழ்மையுள்ளவர்கள் சரியான காரியங்களில் வழிநடத்தப்படுவார்கள், சரியானதைக் கற்றுக்கொள்வார்கள்.

 

பயன்படுத்தப்படும் சூழ்நிலைகள்

சவாலா கடினமா சூழ்நிலைகள் இருந்தாலும், நாம் சரியான தரநிலைகள் மற்றும் மதிப்பீடுகளைப் பின்பற்றுகிறோமா என்பதற்கு பணிவு நமக்கு ஒரு சோதனையாக இருக்கலாம். நம்மைப் பின்பற்றுபவர்கள் பணிவிடை செய்து காரியங்களைச் செய்ய வேண்டும் என்று நாம் விரும்பினால், நாம் மனத்தாழ்மையுடன் இருக்க வேண்டும். மற்றவர்கள் கேலி செய்தாலும், அவமதித்தாலும், துன்புறுத்தினாலும் நாம் மற்றவரின் பைத்தியக்காரத்தனம் மற்றும் பெருமையைப் புரிந்துகொண்டவர்களாய் தாழ்மையுடன் இருக்கலாம்.

 

பாதிக்கும் காரணிகள்

ஒரு நபர் வைத்திருக்கும் அதிகாரமும் பதவியும், ஒன்றும் இல்லாதவர்களிடமோ அல்லது உயர்ந்த அதிகாரமும் பதவியும் உடையவர்களிடமோ தாழ்மையுடன் இருப்பதை மறுக்கச்செய்யலாம். தங்களுடைய உடைமை மற்றும் செழுமையைப் பற்றிப் பெருமைப்படுபவர்களுக்கு மனத்தாழ்மை இருக்காது.

 

தாக்கங்கள்

ஒரு நபர் வாழ்க்கையில் உயர்ந்த மதிப்பீடுகளைக் கொண்டிருக்கும்போது, ​​அந்த நபர் ஒவ்வொருவரின் மரியாதைக்கும் உரியவராகப் பணிவுடன் இருப்பார். வாழ்க்கையின் உயர்ந்த மதிப்பீடுகளைக் கொண்டு மனத்தாழ்மையுடன் இருப்பதற்கான வெகுமதி செல்வம் மற்றும் மரியாதை மற்றும் வாழ்க்கை. மனத்தாழ்மையுடன் இருப்பது ஒரு நபரை வரவிருக்கும் அனைத்து ஆபத்துகளிலிருந்தும் கோபத்திலிருந்தும் பாதுகாக்கிறது. தாழ்மையானவர் உயர்த்தப்படுவார்  மற்றும் தயவைப் பெறுவார். ஒரு தாழ்மையான நபர் அமைதியாக இருப்பது போல் தோன்றினாலும் ஞானத்தைப் பெறுகிறார்.

 

கதை/ வழக்கு ஆய்வு

ஒரு ஞானி எழுந்து ஆடைகளைக் கழற்றி வைத்தார். ஒரு துண்டை எடுத்துத் தன் இடுப்பில் கட்டிக் கொண்டார். பிறகு ஞானி ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றினார். அவர் தம் சீஷர்களின் கால்களைக் கழுவிச் சுத்தப்படுத்த ஆரம்பித்தார். பின் தன் இடுப்புத் துண்டால் அவர்கள் கால்களைத் துடைத்தார். ஞானி, ஷைனிடம் வந்தார். ஆனால் அவன் ஞானிவிடம், “ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவக்கூடாது” என்றான். அதற்கு ஞானி அவனிடம், “நான் என்ன செய்கிறேன் என்று இப்போது உனக்குத் தெரியாது. ஆனால் பிறகு நீ புரிந்துகொள்வாய்” என்றார். ஷைனோ, “இல்லை நீர் என் கால்களைக் கழுவவேகூடாது” என்றான். ஞானியோ, “நான் உன் கால்களைக் கழுவாவிட்டால், நீ என்னோடு பங்குள்ளவனாக இருக்க முடியாது” என்றார். உடனே ஷைன், “ஆண்டவரே, அப்படியானால் என் கால்களோடு, என் கைகளையும் தலையையும்கூடக் கழுவுங்கள்” என்றான். “ஒரு மனிதன் குளித்தபிறகு அவனது சரீரம் எல்லாம் சுத்தமாகிவிடுகிறது. அதன் பிறகு அவன் கால்களை மட்டும் கழுவினால் போதும். நீங்கள் சுத்தமாக இருக்கிறீர்கள். ஆனால் அனைவரும் அல்ல” என்றார் ஞானி. யார் தனக்கு எதிராக மாறியுள்ளவன் என்று ஞானிக்குத் தெரியும். அதனால்தான் ஞானி “நீங்கள் அனைவரும் சுத்தமாக இல்லை” என்று கூறினார். ஞானி அவர்களின் கால்களைச் சுத்தப்படுத்தி முடித்தார். பிறகு அவர் தன் ஆடைகளை அணிந்துகொண்டு சாப்பாடு மேசைக்குத் திரும்பினார். ஞானி அவர்களிடம், “நான் உங்களுக்குக்காகச் செய்தவற்றை நீங்கள் புரிந்துகொண்டீர்களா? நீங்கள் என்னை ‘ஆண்டவரே’ என்று அழைக்கிறீர்கள், இதுதான் சரியானது, ஏனென்றால் உண்மையில் நான் ஆண்டவராகவே இருக்கிறேன். நான் உங்கள் போதகராகவும் ஆண்டவராகவும் இருக்கிறேன். ஆனால் நான் ஒரு வேலைக்காரனைப்போன்று உங்கள் கால்களைக் கழுவினேன். ஆகையால் நீங்கள் ஒருவருக்கொருவர் உங்கள் கால்களைக் கழுவிக்கொள்ளுங்கள். இதை நான் ஒரு முன்மாதிரியாகவே செய்தேன். நான் உங்களுக்குச் செய்ததுபோலவே நீங்களும் ஒருவருக்கொருவர் செய்துகொள்ளுங்கள். நான் உங்களுக்கு உண்மையாகவே கூறுகிறேன். ஒரு வேலைக்காரன் தன் எஜமானனைவிடப் பெரியவன் அல்ல. ஒருவன் என்னதான் பெரிய காரியங்களைச் செய்தாலும் அனுப்பப்பட்டவன் அனுப்பியவரைவிட பெரியவனல்ல. நீங்கள் இவற்றை அறிந்துகொண்டால், அவற்றைச் செய்யும்போது மகிழ்ச்சியடைவீர்கள்.

 

செயல்பாடுகள்

பங்கேற்பாளர்கள் அனைவரும் 5-8 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்படலாம். ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு பலூன் வழங்கப்பட வேண்டும் மற்றும் அவர்கள் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பலூனை ஊதி முடிச்சு போட/ கட்டிவிட வேண்டும். அனைத்து பங்கேற்பாளர்களும் தங்கள் குழுக்களுடன் ஒரு வட்டத்தில் நிற்க வேண்டும், மேலும் தலைவர் பலூனுடன் மையத்தில் இருக்க வேண்டும். வழிநடத்துபவர் தொடங்கலாம் என்று கூறும்போது, தலைவர் பலூனைத் தலைக்கு மேல் வைத்து விட்டுவிட வேண்டும், பிறகு யாரும் பலூனைத் தங்கள் உடலால் தொடக் கூடாது, ஊதிப் பலூனைக் காற்றில் இருக்குமாறு செய்ய வேண்டும். பலூனைக் காற்றில் நீண்ட நேரம் இருக்கச் செய்யும் குழு வெற்றி பெறும்..

 

பங்கேற்பாளர்கள் அனைவரும் 5-8 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்படலாம். ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் எதிர்கொள்ளும் வகையில் வட்டமாக  நின்று கைகள் நீட்டிய நிலையில் ஒருவரின் கைகளை இன்னொருவர் பிடிக்க வேண்டும். அவர்கள் அனைவரும் கைகளை விட்டு விடாமல், கைகள் நீட்டிய நிலையில் வெளியே பார்த்தவாறு திரும்ப வேண்டும். யாருடைய கைகளும் மடங்கிய நிலையில் இருக்கக் கூடாது. ஒருவரையொருவர் மதிக்க வேண்டிய சவால்கள் மற்றும் அவசியம் குறித்து விவாதிக்கப்படலாம். 

 

பங்கேற்பாளர்கள் அனைவரும் 5-8 உறுப்பினர்களைக் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்படலாம். தொடக்கக் கோடு மற்றும் இறுதிக் கோடு 5 முதல் 10 மீட்டர் வரை இருக்க வேண்டும். ஒரு நேரத்தில் ஒரு நபர் மட்டும் மற்றவர்களின் கால்களுக்கு இடையில் நகர வேண்டும். அனைத்து உறுப்பினர்களும் கால்களுக்கு இடையில் கடந்து இறுதிக் கோட்டைக் கடக்க வேண்டும். முதலில் முடிக்கும் குழு வெற்றியாளர்.

Comments