அறிமுகம் மற்றும் பயன்படுத்தும் விதம்
அறிமுகம் மற்றும் பயன்படுத்தும் விதம்
இந்தக் கையேடு 13 அத்தியாவசிய மதிப்பீடுகளைக் கொண்டுள்ளது,
இவை மிகவும் அடிப்படையானவை மற்றும் மற்ற எல்லா மதிப்பீடுகளையும் ஏதோ ஒரு விதத்தில் இணைக்கிறது. புரிதல்
மற்றும் கற்றலின் எளிமைக்கு,
இதில் உள்ள எல்லா மதிப்பீடுகளின் உள்ளடக்கமும் ஒத்த வடிவத்தைக்
கொண்டுள்ளது. துணை-தலைப்புகளும்,
கற்றுக்கொள்ள அல்லது கற்பிப்பதற்கு அதிலிருந்து பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் பின்வருமாறு.
அறிமுகம்
இது மதிப்பீட்டைப் பற்றி அறிந்து மதிப்பீட்டை
வரையறுக்கப் பயன்படுத்தப்படுகிறது. மற்றவர்களுக்குக் கற்பிக்கும்பொழுது, “ ‘இந்த மதிப்பீட்டை’ பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”
அல்லது “ ‘இந்த மதிப்பீட்டிற்கு’ என்ன அர்த்தம்?” போன்ற சில திறந்த கேள்விகளை அவர்களின்
எண்ணங்களைப் புரிந்துக்கொள்வதற்கு பயன்படுத்தலாம்,
பின்னர் அந்த எண்ணங்களை ‘அறிமுகம்’ கீழ் உள்ள முக்கிய புள்ளிகளைப்
பயன்படுத்தி ஒருங்கிணைத்துச் சொல்லலாம்.
முக்கியத்துவம்
மதிப்பீடு ஏன் முக்கியமானது என்பதை அறிய இது பயன்படுத்தப்படலாம்.
மற்றவர்களுக்குக் கற்பிக்கும்பொழுது, “ஏன்
‘இந்த மதிப்பீடு’ தேவை?” அல்லது “ ‘இந்த மதிப்பீட்டின்’ முக்கியத்துவம்
என்ன?” போன்ற சில திறந்த கேள்விகளை அவர்களின்
எண்ணங்களைப் புரிந்துக்கொள்வதற்கு பயன்படுத்தலாம்,
பின்னர் அந்த எண்ணங்களை ‘முக்கியத்துவம்’ கீழ் உள்ள முக்கிய புள்ளிகளைப்
பயன்படுத்தி ஒருங்கிணைத்துச் சொல்லலாம்.
அது பயன்படுத்தப்படும் சூழ்நிலைகள்
மதிப்பீடு பயன்படுத்தப்படும் சூழ்நிலைகளைப் பற்றி அறிய இது உதவுகிறது. மற்றவர்களுக்குக் கற்பிக்கும்பொழுது, “எந்தச் சூழ்நிலைகளில் ‘இந்த மதிப்பீடு’ பயன்படுத்தப்படுகிறது?”
அல்லது “ ‘இந்த மதிப்பீடு’ எந்தவித சூழ்நிலைகளில் பயனுள்ளது?” போன்ற சில திறந்த கேள்விகளை அவர்களின்
எண்ணங்களைப் புரிந்துக்கொள்வதற்கு பயன்படுத்தலாம், பின்னர் அந்த எண்ணங்களை ‘அது பயன்படுத்தப்படும் சூழ்நிலைகள்’ கீழ்
உள்ள முக்கிய புள்ளிகளைப் பயன்படுத்தி ஒருங்கிணைத்துக்
சொல்லலாம்.
பாதிக்கும் காரணிகள்
மதிப்பீட்டைப் பாதிக்கும் வெவ்வேறு காரணிகளை அறிய இது உதவும். மற்றவர்களுக்குக் கற்பிக்கும்பொழுது, “ ‘இந்த மதிப்பீட்டை’ பின்பற்றுவது எப்படி கடினமாக இருக்கும்” அல்லது “ ‘இந்த மதிப்பீட்டை’
கொண்டிருப்பதிலிருந்து நம்மை எது விலக்கிக் கொள்ள செய்கிறது?”
போன்ற சில திறந்த கேள்விகளை அவர்களின் எண்ணங்களைப் புரிந்துக்கொள்வதற்கு
பயன்படுத்தலாம், பின்னர் அந்த எண்ணங்களை ‘பாதிக்கும் காரணிகள்’ கீழ் உள்ள
முக்கிய புள்ளிகளைப் பயன்படுத்தி ஒருங்கிணைத்துச் சொல்லலாம்.
தாக்கங்கள்
மதிப்பீட்டால் உருவாக்கப்படும் தாக்கத்தை அறிய இது உதவும். மற்றவர்களுக்குக் கற்பிக்கும்பொழுது, “ ‘இந்த மதிப்பீடு’ சுயத்தையோ மற்றவர்களையோ எவ்வாறு பாதிக்கும்?”
அல்லது “ ‘இந்த மதிப்பீடு’ என்ன வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது?”
போன்ற சில திறந்த கேள்விகளை அவர்களின் எண்ணங்களைப் புரிந்துக்கொள்வதற்கு
பயன்படுத்தலாம், பின்னர் அந்த எண்ணங்களை ‘பாதிக்கும் காரணிகள்’ கீழ் உள்ள
முக்கிய புள்ளிகளைப் பயன்படுத்தி ஒருங்கிணைத்துச் சொல்லலாம்.
கதை/ வழக்கு ஆய்வு
மதிப்பீட்டை நடைமுறையோடு இணைக்க இது உதவும். மற்றவர்களுக்குக் கற்பிக்கும்பொழுது, “ ‘இந்த மதிப்பீடு’ கதை/வழக்கு
ஆய்வோடு எவ்வாறு இணைக்கப்படலாம்?”
அல்லது “நம் நடைமுறை வாழ்வில் ‘இந்த மதிப்பீட்டை’ எவ்வாறு
பயன்படுத்தலாம்?” போன்ற சில திறந்த கேள்விகளைக் கதை/வழக்கு ஆய்வைப்
பிரதிபலிக்கப் பயன்படுத்தலாம்,
அவர்களின் எண்ணங்களைப் புரிந்துக்கொள்வதற்கு பயன்படுத்தலாம்,
பின்னர் அந்த எண்ணங்களை மற்ற கற்றல்களைப் பயன்படுத்தி ஒருங்கிணைத்துச் சொல்லலாம்.
செயல்பாடு
ஆர்வமுள்ள தொடர்புக்கொள்ளுதலுடனும்
ஈடுபாட்டுடனும் திறம்பட ஒருவரை சிந்திக்கச் செய்யவும், கற்றல்களை அதிக காலம் நினைவில் வைக்கச் செய்யவும் இது
உதவும். கற்றல்களை ஒருவரோடொருவர் பகிரலாம், பின்னர் இதைக் கொண்டு முழுவதுமாக ஒருங்கிணைத்துச்
சொல்லலாம்.
Comments
Post a Comment