முன்னுரை
முன்னுரை
வேகமாக நகரும் மற்றும் மாறிவரும் உலகில்,
மக்களை மகிழ்விப்பதற்காகச் சட்டங்கள் மற்றும் விதிகள் கூட மாறுகின்றன,
மேலும் நல்ல நடைமுறைகள் மற்றும் எண்ணங்களில்
மறைந்திருக்கும் பெரும்பாலான மதிப்பீடுகளை நாம் மறந்துவிட்டோம், அதில் வாழ்க்கையின் அத்தியாவசிய அம்சங்கள் நிறைய உள்ளன. காரியங்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும்
இருக்கும் பல விஷயங்களைப் பற்றி அறிய முயற்சிக்காமல் நமது பின்னணி மற்றும் தரங்களின் அடிப்படையில் சில விஷயங்களைப் பகுத்தறிவு
செய்யத் தொடங்கிவிட்டோம். ஒவ்வொரு தனிமனிதனும் தன்னைச்
சுற்றியுள்ள மக்களுக்குப் பயனளிப்பதன் மூலம் சமநிலையுடனும் முழுமையாகவும்
செயல்படுவதற்குத் தேவையான அத்தியாவசிய மதிப்பீடுகளை அடுத்த
தலைமுறையினருக்குக் கற்பிக்க வேண்டிய ஒரு கட்டத்தில் நாம் வந்திருப்பதற்கு இதுவே
சாத்தியமான காரணம்.
முக்கிய மதிப்பீடுகள் என்பது மக்கள் ஒன்று கூடும் மையங்கள்
மற்றும் நிறுவனங்களில் அதன் நோக்கத்திற்கான ஒரு பகுதியாகும். நம்பகத்தன்மை, நேர்மை, சகிப்புத்தன்மை, சமத்துவம், பொறுப்பு போன்ற பல முக்கியமான அடிப்படை மதிப்பீடுகள் மிகவும் சிந்திக்கப்பட்டு
வடிவமைக்கப்படுகின்றன. திறன்கள்,
கல்வித் தகுதிகள் மற்றும் சான்றிதழ்கள் ஒரு பக்கம் இருப்பினும், சில நேரங்களில் சிறந்த கற்றல் மற்றும் பணிச்சூழலுக்கு
இந்த மதிப்பீடுகள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
தனிநபருக்கு ஏற்றக் கற்றல் அல்லது பணிச்சூழலுக்குத் தேவையானது திறன்கள் மட்டுமல்ல, ஒருவரையும் எதையும்
எதிர்மறையாகப் பாதிக்காமல் உண்மையிலேயே பயனளிக்கும் விதத்தில்
மதிப்பீடுகளோடு திறன்களைப் பயன்படுத்துவதும் கடைப்பிடிப்பதுமாகும்.
‘வெற்றியாளரின் மதிப்பீடுகள்' என்பது ஒரு தனிநபர் மிக முக்கியமான அம்சங்களைப் கடைப்பிடிப்பதற்கும், நாம் ஒவ்வொருவரும் ஈடுபடும் அனைத்திலும் சிறந்த முயற்சிகளை எடுப்பதற்கும் உதவியாக இருக்கும். யார் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் உண்மையுள்ளவர்களாகச் சரியானதைச் செய்ய இது நம்மைத் தூண்டுகிறது. இது நாம் சிறந்த முறையில் ஆட்களுக்கிடையிலான உறவுகளைக் கொண்டிருக்கவும் சுய-நிறைவாகுதலை அடையவும் செய்கிறது.
Comments
Post a Comment